
தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் விடுமுறை. அதன் பிறகு வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாளாக இருந்த நிலையில் அன்றைய தினமும் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்ததால் தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. இதன் காரணமாக 6 நாட்கள் மொத்தம் விடுமுறை.
இதற்கிடையில் நேற்றும் நாளையும் விடுமுறை வரும் நிலையில் நாளையும் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால் விடுமுறை வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் நாளை ராமநாதபுரம் மற்றும் கடலூர் ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த இரு மாவட்டங்களுக்கும் மொத்தம் 9 நாட்கள் விடுமுறை. அதாவது பிரசித்தி பெற்ற கோவில்களின் திருவிழாக்களை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு பள்ளிக்கு மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.