குளிர் சாதனப்பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பல்பொருள் அங்காடியில் சாக்லேட்டுக்காக குளிர்சாதனப் பெட்டியைத் திறக்கச் சென்ற குழந்தை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் நந்திபேட்டில் உள்ள நவிபேட் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் தனது மகள் ருஷிதாவுடன் (வயது 4) சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றார். இந்த நிலையில், சாக்லேட் சாப்பிடுவதற்காக குளிர்சாதன பெட்டி கதவை திறந்த குழந்தை திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.