கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வீட்டில் இருக்கும் பெண்கள் சமைப்பதற்காக சமையலறைக்கு சென்றனர். அப்போது ஒரு நாக பாம்பு பிரஷர் குக்கரில் பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த பாம்பு குக்கருக்குள் சுருண்டு கிடந்தது.
இது குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு நாக பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.