தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் மே ஒன்றாம் தேதிக்குள் அதை அகற்ற வேண்டும் அப்படியே அகற்றாவிட்டால் வழக்கு பதிவு செய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும், மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

மேலும் மே ஒன்றாம் தேதி முதல் இதுபோன்று ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீசாரின் வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் போலீஸ் என ஸ்டிக்கர்  ஒட்டப்பட்டுள்ளது. இதனை நீக்கி வேப்பேரி போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையானது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.