இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதில் சில வீடியோக்கள் நம்மை வியக்க வைக்கும் விதமாகவும் சிந்திக்க வைக்கும் விதமாகவும் இருக்கும். அதிலும் குறிப்பாக விலங்குகள் மனிதர்களைப் போலவே செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை. இதனை இணையத்தில் பார்ப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. நம்முடைய வீட்டில் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகள் பெரும்பாலும் குளிக்கிறது என்பது மிகவும் அரிதான விஷயம்தான். இவை குளிக்க வைப்பதற்கு வீட்டில் உள்ளவர்கள் பெரும் பாடுபடுவார்கள்.

ஆனால் ஒரு சில வீடுகளில் இருக்கும் நாய்கள் அதுவாகவே குளித்துக் கொள்ளும். அதன்படி அழகிய பொன்னிற நாய் ஒன்று வெள்ளை நிற வாலியில் ஏறி அமர்ந்து கொண்டு குழாயை திறந்து விட்டு மிக அழகாக குளிக்கின்றது. அதனை பார்க்கும் போது திரைப்படங்களில் கதாநாயகி அறிமுகம் கொடுக்கும் போது நீரில் ஆட்டம் போடுவது போல இந்த நாயும் ஆட்டம் போடுகின்றது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

https://twitter.com/buitengebieden/status/1619959342551412740