தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் 14 வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், சாண்டி மாஸ்டர் போன்ற பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் காஷ்மீரில் லியோ படத்தின் சூட்டிங் இல் கலந்து கொண்டுள்ள திரிஷா அங்கிருந்து எடுக்கும் புகைப்படங்களை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு காஷ்மீரில் உள்ள ஒரு சிவன் கோவிலில் திரிஷா சிவனுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவை நடிகை திரிஷா தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
🔱🕉️#Mahashivratri pic.twitter.com/kKR2kgqhEJ
— Trish (@trishtrashers) February 18, 2023