பிரபல இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் தலைக்கூத்தல் படத்தை தொடர்ந்து தற்போது பொதுவுடமை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஜெய் பீம் படத்தில் நடித்த லிஜோமோல், ரோகினி, வினித், அனுஷா, தீபா போன்ற பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரை பிரபல நடிகை ஜோதிகா வெளியிட்டுள்ளார். அதன் பிறகு காதல் என்பது இரண்டு பாலினம் சார்ந்தது அல்ல. அது இரண்டு இதயம் சார்ந்தது. எனவே காதல் மற்றும் அன்பை மட்டுமே மதித்து காதலர் தினத்தை கொண்டாடுவோம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.