கேரளாவில் உள்ள பத்தினம் திட்டா பகுதியில் 18 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தடகள வீராங்கனை. ‌ இந்த மாணவிக்கு 13 வயது இருக்கும் போது பலர் பலாத்காரம் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 5 வருடங்களால் 60-க்கும் பலாத்காரம் செய்த நிலையில் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இந்த உண்மை தெரிய வந்தது. இது தொடர்பாக குழந்தைகள் நல கமிட்டியில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 64 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மாணவியின் காதலன் முதல் கொண்டு பள்ளியில் படிக்கும் சக தோழர்கள், அவருடைய பயிற்சியாளர், உறவினர்கள் என பலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த வழக்கில் ஸ்ரீனி, அனந்து, சந்தீப், சுபின் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.