உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜாலானில் 32 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கும் 40 வயதுடைய நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. சம்பவம் நடைபெற்ற அன்று அந்த பெண்ணின் வீட்டில் இருவரும் நிர்வாணமாக உடலுறவு கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண்ணின் கணவர் வந்தார். உடனே கோபத்தில் அவர் கோடாரியால் தனது மனைவியையும் அவரது கள்ளக்காதலனையும் கொடூரமாக வெட்டி கொலை செய்தார்.

இந்த சம்பவம் நடைபெற்ற போது பக்கத்து அறையில் அவர்களது எட்டு மற்றும் பத்து வயது பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு வந்த பிள்ளைகள் கொடூர சம்பவத்தை பார்த்து அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அந்த பெண்ணின் கணவரை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.