திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கத்தில் ஜெய் ஸ்ரீ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி மாணவி. இவர் கிஷோர் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளில் கிஷோருடன் சேர்ந்து அவருடைய  நண்பர் வீட்டிற்கு ஜெய் ஸ்ரீ சென்றுள்ளார். அப்போது திடீரென அவரின் வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனடியாக கிஷோர் மற்றும் அவருடைய நண்பர்கள் ஜெய்ஸ்ரீயை மீட்டு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் அங்கு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கிஷோர் உட்பட 5 பேரைப் பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள். இவர்களில் 2 பேர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள். இதனால் மாணவி கொலை செய்யப்பட்டாரா என்று கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.