சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்த தர்ஷா குப்தா நடிப்பில் “ஓ மை கோஸ்ட்” படம் திரைக்கு வந்திருக்கிறது. இவற்றில் சன்னிலியோனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் தர்ஷா குப்தா சோஷியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், தர்ஷா குப்தா கவர்ச்சியை மட்டுமே நம்பி இருக்கிறார்.

ஆகவே அதைதாண்டி நடிப்பு திறமையை வெளிப்படுத்துங்கள் என ரசிகர்கள் வலைத்தளத்தில் விமர்சித்து வந்தனர். தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் அடிப்படையில், ஓ மை கோஸ்ட் படத்தில் தர்ஷா குப்தா கயிறு கட்டி கஷ்டப்பட்டு நடித்த வீடியோவை வெளியிட்டு, ”கவர்ச்சியை தாண்டி உங்களின் உழைப்பையும், நடிப்பு திறனையும் காட்டுங்கள்” என கூறிய அனைவருக்கும் இப்படத்தின் வீடியோவை சமர்ப்பிக்கிறேன். கடின உழைப்பு இன்றி எதுவுமே எளிதாக நடக்காது என அவர் கூறியுள்ளார். தர்ஷா குப்தா வெளியிட்ட கருத்துக்கு பல ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.