பாஜக, அதிமுக இடையே கருத்து வேறுபாடு எழுந்திருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது என்று முன்னதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். மேலும் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என்றும் பேசியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஓபிஎஸ், “இந்தியத் திருநாடே வியந்து பார்த்த வீரம் மிக்க தலைவரை, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாம் ஜெயலலிதாவையும், அவருடைய ஆட்சியையும் தரக்குறைவாக அண்ணாமலை விமர்சித்திருப்பது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.