![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/12/BeFunky-collage_-68.jpg)
டெல்லியைச் சேர்ந்த சவான் என்ற வாலிபர் தனது தாயை கொலை செய்து நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியை சேர்ந்த சுலோச்சனா என்பவரது இளைய மகன் சவான். இவருக்கு 22 வயது ஆகிறது. சவானின் அண்ணன் கபிலுக்கு(27) விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதனால் சவான் தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தனது தாயிடம் கூறியுள்ளார்.
ஆனால் அவரது தாய் அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தார். மேலும் உன் விருப்பப்படி நீ திருமணம் செய்தால் சொத்தில் பங்கு தர மாட்டேன் என எச்சரித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த சவான் தனது தாயை கொலை செய்து நாடகமாடியுள்ளார். வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சுலோச்சனாவே கொலை செய்துவிட்டு காதணிகளை திருடியது போல நாடகமாடியுள்ளார். அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.