தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்த நிலையில் குளிர்ச்சி ஊட்டும் விதமாக கடந்த ஒரு வரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களுக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கனமழையின் காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை நேற்று முன்தினம், நேற்றும் ரத்து செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.