கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் விசிக நிர்வாகியான ஓசூர் செல்வத்தின் இரு மகள்கள் நிஷா, பிரியா  மற்றும் அவருடைய தம்பி மகன் அம்பேத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரே குடும்பத்தில் மூவர் பலியான இந்த துயர சம்பவத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், மேலும் செல்வத்தை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்ததாகவும் திருமாவளவன்  ட்வீட் செய்துள்ளார்.