திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ராஜீவ் காந்தி நகரில் அஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவர் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் இந்த விவகாரம் பெண் வீட்டாரிற்கு தெரியவந்தது. இதனால் 7 வருடங்களுக்கு முன் அந்தப் பெண்ணுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இவருக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

இதனால் அஜித் குமார் அந்த பெண்ணுடன் பழகி வந்தார். இந்நிலையில் அந்தப் பெண் திடீரென அஜித்குமாருடன் பேச மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் பழைய பேருந்து நிலையம் அருகே  அந்த பெண்ணை வழிமறித்து தகராறு செய்துள்ளார். இதனையடுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அஜித்குமார் தானாகவே முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்துவிட்டார். இவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.