நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டம் தனிநபர்கள் தங்கள் வயதான காலத்தில் அவர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மத்திய அரசு வழங்கும் இந்த ஓய்வூதியத் திட்டம், உத்தரவாதமான ஓய்வூதியத்தை ரூ. 1,000 முதல் ரூ.500 வரை செய்த முதலீட்டின் அடிப்படையில் மாதம் 5,000 கொடுக்கிறது.  18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம்.

60 ஆண்டுகள் நிறைவடைந்தால் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்தால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் பெறலாம். இதற்கு மாதந்தோறும் பிரீமியம் செலுத்த வேண்டும். முழுமையான விவரங்கள் அறிய https://www.india.gov.in/spotlight/atal-pension-yojana என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.