சென்னை பள்ளிக்கரணையில் கணவரின் ஆவண கொலையால் மன உளைச்சலில் இருந்த மனைவி ஷர்மிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயமரியாதை திருமணம் செய்த நான்கு மாதங்களில் பட்டியல் இனத்தை சேர்ந்த பிரவீன், பிப்ரவரி 24ஆம் தேதி பெண்ணின் சகோதரர் உட்பட ஐந்து பேரால் கொலை செய்யப்பட்டார். பிரவீன் கொலைக்கு காரணமானவர்களுக்கு போலீசார் உடந்தையாக இருப்பதாக ஷர்மிளா குற்றம் சாட்டி இருந்த நிலையில் நேற்று இரவு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.