கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ…. கருகிய வனவிலங்குகள்…. அணைக்க போராடும் போர் விமானம்….!!!!

சிலி நாட்டில் கடுமையான வெப்ப காற்று வீசி வருகின்றது. இந்த வெப்பக் காற்றினால் அந்நாட்டில் உள்ள காடுகள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. இதுவரையில் 2 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டர் நிலங்கள் தீயில் கருகி நாசமாகியது. இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர். ஆனால் நிலைமை கையை மீறி சென்று விட்டதால் அந்நாட்டு அரசு சர்வதேச நாடுகளின் உதவியை கோரியுள்ளது.

மேலும் போர் விமானங்களை தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தி உள்ளது. இந்த போர் விமானங்கள் பல லிட்டர் தண்ணீரை எடுத்துக்கொண்டு பரவி வரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அது மட்டுமில்லாமல் காட்டுத் தீயினால் உடல் கருகி உயிரிழக்கும் விலங்குகளையும் தீயணைப்பு துறையினரும் சர்வதேச தன்னார்வலர்களும் மீட்டு வருகின்றனர். இந்த காட்டுத்தையால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விடாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால் அந்நாடு முழுவதும் புகைமூட்டமாகவும் வானம் செந்நிறமாகவும் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.