கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊ ஊழியர்களை பணிநீக்கம் செய்து வர, இந்த லிஸ்ட்டில் அமெரிக்க வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் பள்ளி கல்லூரிகள் அனைத்துமே மூடப்பட்டது. அப்போது குழந்தைகளுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்துவதற்கும், பல்வேறு நிறுவனங்களும் மூடப்பட்டதால் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றி வந்ததற்கும் இந்த ஜூம் செயலி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இந்நிலையில் இந்நிறுவனம் 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.