பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட சில தினங்களுக்கு பின், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த காயத்திரி ரகுராம், கடிதம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். அதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் டேஹ் செய்திருக்கிறார். தற்போது காயத்திரி ரகுராம் எழுதியுள்ள கடிதத்தில், கடவுள் உங்களை பார்த்துக்கொள்வார்.

நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு பதில் கூறுவார்கள். நான் என் தர்மத்தை நிலை நாட்டுவேன். விரைவில் களத்தில் சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார். தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை வந்த பிறகு விஷயங்கள் கைமீறி போய் விட்டது. தலைமைப் பொறுப்பில் உள்ள அண்ணாமலையால் பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக நேரடி தாக்குதலில் இறங்கி இருந்தார் காயத்ரி ரகுராம்.