தலைநகர் டெல்லியில் பைக் டாக்ஸிகளை இயக்க அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் நேற்று தடை விதித்தது. இறுதி கொள்கை வகுக்கும் வரை டெல்லி சாலைகளில் பைக் டாக்ஸிகள் ஓடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உபேர் மற்றும் ரேபிடோ நிறுவனங்களின் சேவைகளை தொடர்பான விரிவான கொள்கையை உருவாக்க டெல்லி அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் பொதுவாகவே அனைத்து வாகனங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பைக் டாக்சி நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார்.