கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் ஒரு ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு நர்சிங் மாணவி ஒருவர் சென்ற நிலையில் அவர் நடைமேடைக்கு அருகே உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது ரயில் கிளம்பியதால் அவர் வேகமாக ஓடி சென்று ரயிலில் ஏற முயன்றார். ஆனால் திடீரென அந்த மாணவி தண்டவாளத்திற்கு நடுவில் கால் தவறி விழுந்துவிட்டார்.
இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் உடனடியாக சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். பின்னர் தண்டவாளத்தில் சிக்கி இருந்த மாணவி மீட்கப்பட்டார். மேலும் அந்த மாணவி அதிர்ஷ்டவசமாக சிறு காயம் உடன் உயிர் காப்பிய நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.