அசாம் மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள் உள்ளனர். சோனிட்பூர் மக்களவைத் தொகுதியில் வசிக்கும் ரோன் பகதூருக்கு ஐந்து மனைவிகள், 12 மகன்கள், ஒன்பது மகள்கள், 56 பேரன்கள், 12 சகோதரர்கள் மற்றும் ஒன்பது சகோதரிகள் உள்ளனர். அவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சேர்த்து 1200 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் சுமார் 350 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். அதே தொகுதியில் மற்றொரு குடும்பத்திற்கு 300 வாக்குகள் உள்ளது.