குஜராத்தில் 35 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவருக்கு வேலை தருவதாக அழைத்துச் சென்று சுகாதார ஊழியர் ஒருவர் குடும்ப கட்டுப்பாடு செய்ததாக அந்த நபர் குற்றம் சாட்டியுள்ளார். சம்பந்தப்பட்ட நபருக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த நபரின் குடும்ப கட்டுப்பாடு ஒப்புதல் படிவத்தில் அவரின் கைநாட்டுடன் அவருக்கு 3 குழந்தைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.