ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ்  விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெற்றிக்கு சென்றுள்ளனர்.  மேலும் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒடிசாவிலிருந்து தமிழகம் வருவோருக்கு சிகிச்சை அளிக்கப்படுவது போலவே, ஒடிசாவிலேயே உடனடி சிகிச்சை தேவைப்படுவோருக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், கடைசி பயணியும் மீட்கப்பட்டு அவருக்கும் சிகிச்சை தரப்படும்வரை, தமிழகத்தில் இருந்து சென்ற குழு அங்கே இருக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.