டெல்லி ஆயா நகரில் அக்டோபர் 30ஆம் தேதி நடந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. குறுகிய பாதையில் நடந்து சென்ற பெண்ணை பசு ஒன்று திடீரென தாக்கியது. அந்த பெண் தைரியமாக மாட்டின் கொம்புகளை பிடித்ததால், மாடு சில நொடிகள் அமைதியாக நின்றது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து விரட்டியதன் மூலம், மாடு அங்கிருந்து ஓடிவிட்டது. எனினும் பெண்ணுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடியோ வைரலானதை தொடர்ந்து, தெரு மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.