இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியில் உள்ள பின்ராங் பகுதியில், விடுதி ஒன்றில் கணவர் வேறொரு பெண்ணுடன் இருந்ததாகக் கூறி அவரது மனைவி கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைக்குழந்தையைச் சுமந்தபடி வந்த மனைவி, விடுதி அறைக்கு வெளியே பலரின் முன்னிலையில் கணவரைக் கண்டறிந்து கேள்வி எழுப்பிய இந்தக் காட்சி, சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. அந்தச் வீடியோ பதிவில், தன் பிஞ்சு குழந்தையைத் தூக்கிக்கொண்டு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும் அந்தப் பெண், விடுதியில் இருந்த ஒரு குறிப்பிட்ட அறைக்குச் செல்கிறார்.

அங்குத் தன் கணவர் மற்றொரு பெண்ணுடன் இருப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து அங்கிருந்தவர்களிடம் நியாயம் கேட்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. கைக்குழந்தையுடன் ஒரு தாய் தன் உரிமைக்காகப் போராடும் இந்தக் காட்சி பார்ப்போரின் மனதை நெகிழ வைப்பதாக அமைந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்தோ அல்லது உள்ளூர் காவல் துறை தரப்பில் இருந்தோ இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளிவரவில்லை. இருப்பினும், இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தள பயனாளர்களிடையே கடுமையான விவாதங்களை கிளப்பியுள்ளதுடன், இணையத்தில் மிக வேகமாகப் பகிரப்பட்டும் வருகிறது.

“>