அமரன்’ திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி தனது எண்ணை காகிதத்தில் எழுதி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கசக்கி கொடுக்கும் காட்சி உள்ளது. அந்த எண்ணை உண்மையான தொலைபேசி எண் என எண்ணிய பலர், வி.வி.வாகீசன் என்ற சென்னையைச் சேர்ந்த இளைஞரின் எண்ணுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான அழைப்புகளைத் தந்து வருகின்றனர்.
இதனால் அவர் பெரும் சிரமத்தில் உள்ளதாக வேதனை தெரிவித்தார். அவரது செல்போன் எண்ணுக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட மிஸ்டு கால், வாய்ஸ் மெசேஜ்களால் நிறைந்துள்ளது. தொடர்ந்து குரல் அழைப்புகளால் அவதிப்படும் வாகீசன், தற்போது தனது தொலைபேசியை சைலன்ட் மோடில் வைத்துள்ளார்.
இது தொடர்பாக ‘அமரன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனிடம் வாகீசன் சமூக வலைதளத்தில் தொடர்பு கொள்ள முயன்றும், இதுவரை பதில் கிடைக்கவில்லை. “இந்த எண்ணை 2 ஆண்டுகளாகவே பயன்படுத்தி வருகிறேன். வங்கி உள்ளிட்ட பல சேவைகளுக்கும் இதையே பயன்படுத்துகிறேன், என்ன செய்யலாம் என தெரியவில்லை. ஏர்டெல் நிறுவனமும் உதவி செய்யவில்லை” என வருத்தம் தெரிவித்தார்.