மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஹர்ஷ் பர்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 26 வயதாகும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் கேடராக 2023 பேட்ச் ஐபிஎஸ் பயிற்சி பெற்றவர். இவர் 4 வார காலமாக மைசூரில் உள்ள கர்நாடகா போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்றார். இவருக்கு பயிற்சி முடிவடைந்த நிலையில் துணை காவல் கண்காணிப்பாளராக பதவி வழங்கப்பட்ட நிலையில் பொறுப்பேற்பதற்காக நேற்று ஹசன் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். இவர் போலீஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பயங்கர விபத்து ஏற்பட்டது.
அதாவது தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த வீடு மற்றும் மரத்தின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ஓட்டுநருக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில் ஹர்ஷ் பரதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவருடைய மறைவுக்கு கர்நாடக முதல் மந்திரி சித்த ராமையா இரங்கல் தெரிவித்துள்ளார்.