அடுத்த வருடம் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது மெகா ஏலம் நடைபெறும் தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெடா நகரில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த ஏலத்தில் 1165 இந்திய வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும் இந்த ஏலத்தில் மொத்தம் 204 வீரர்கள் எடுக்கப்பட உள்ளனர். முன்னதாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலை கடந்த 31 ஆம் தேதி வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.