ஒடிசாவை சேர்ந்த டீப்தி ரஞ்சன் (32) என்பவர் சென்னையை  அடுத்த மேடவாக்கத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தான் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ரஞ்சன் தன்னுடன் தங்கி வேலை செய்த ஒடிசாவை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அந்த பெண் அவருடன் பேச மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் விரத்தியில் இருந்த ரஞ்சன் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.