எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு…. GPay, Phone Pay, Paytm பயனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. அதனால் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை மட்டுமே யுபிஐ செயலி மூலம் பணம் செலுத்த முடியும். பொதுவாக ஒவ்வொரு வங்கிக்கும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு தினசரி வரம்பு உள்ளன. அதன்படி ஒரு நாளில் குறிப்பிட்ட தொகை வரை மட்டுமே பணம் அனுப்பவும் பெறவும் முடியும். இதனைத் தவிர ஒரு நேரத்தில் யுபிஐ மூலம் எவ்வளவு பணம் அனுப்பலாம் மற்றும் பெறலாம் என்பதற்கு வெவ்வேறு வங்கிகள் வெவ்வேறு வரம்புகளை நிர்ணயம் செய்துள்ளனர்.

ஆனால் செயலி மூலம் பணம் அனுப்பும்போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. கனரா வங்கியில் தினசரி வரம்பு 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே, அதுவே எஸ்பிஐ வங்கியில் தினசரி வரம்பு ஒரு லட்சமாக உள்ளது. அமேசான் பே யுபிஐ மூலம் பணம் செலுத்துவதற்கான அதிகபட்ச வரம்பு ஒரு லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்த பிறகு பயனர்கள் முதல் 22 மணி நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். போன் பே யுபிஐ மூலம் ஒரு நாள் அதிகபட்சம் தொகை ஒரு லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யலாம்.

தற்போது இந்த செயலியில் ஒரு நாளில் அதிகபட்சமாக 10 அல்லது 20 பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய முடியும். கூகுள் பே மூலம் இந்திய பயனர்கள் நாள் முழுவதும் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தலாம். ஒரு நாளில் பத்து பரிவர்த்தனைகளை மட்டுமே செய்ய முடியும். Paytm மூலமாக ஒரே நாளில் ஒரு லட்சம் ரூபாயை பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த செயலியில் ஒரு மணி நேரத்தில் வெறும் 20 ஆயிரம் ரூபாய் எடுக்கலாம். இந்த செயலி மூலம் நீங்கள் ஒரு மணி நேரத்தில் ஐந்து பரிவர்த்தனைகளையும் ஒரு நாளில் 20 பரிவர்த்தனைகளை மட்டுமே செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.