சர்வதேச விண்வெளி மையத்திற்கு கடந்த மாதம் 5-ம் தேதி இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சென்ற நிலையில் திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அந்தப் பிரச்சினை சரி செய்யப்பட்டு விடும் என்று சமீபத்தில் போயிங் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட 50 நாட்களைக் கடந்தும் அவர்கள் இருவரும் விண்வெளியில் சிக்கித் தவிப்பது கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது நாசா ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது அவர்கள் நீண்ட நாட்களாக விண்வெளியில் தவிப்பதால் அவர்கள் இருவருக்கும் தசை பிடிப்பு மற்றும் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு நீரிழிப்பு மற்றும் எலும்புகளில் இருந்து கால்சியம் வெளியேறுதல் போன்றவைகளால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நாசா இருவருக்கும் உடம்பில் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.