மதுரை மாவட்டத்திலுள்ள காமராஜர் புரத்தில் ராமர்(30) என்பவர் வசித்து வருகிறார். இவரது சின்ன மாமியாரின் மகன் விஜய்(28). இருவரது வீடுகளும் அடுத்தடுத்த தெருவில் இருக்கிறது. விஜய் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கோயம்புத்தூரில் வேலை பார்த்த விஜய் தீபாவளிக்காக வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ராமர் தனது மகனை தேடி விஜய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விஜய் அவரது மகனுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமர் விஜயை கண்டித்து தனது மகனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

அதன் பிறகும் ராமரின் மகன் அழுது கொண்டே இருந்தார். இதனை பார்த்ததும் கோபமான ராமர் மீண்டும் விஜயின் வீட்டிற்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த விஜய் மீது பீரோ கால்களுக்கு வைத்திருந்த ஒரு கல்லை எடுத்து அவரது தலையில் ஓங்கி அடித்தார். இதனால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விஜய் உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ராமரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.