சென்னை மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரியில் ஆட்டோ ஓட்டுனரான நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அர்ச்சனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 11 மாத குழந்தை இருக்கிறது. வருகிற 20 ஆம் தேதி குழந்தைக்கு முதல் பிறந்த நாளை கொண்டாட உள்ளனர். இந்த நிலையில் பிறந்தநாள் விழாவிற்கான அழைப்புதல்களை கொடுப்பதற்காக நந்தகுமாரும் அர்ச்சனாவும் ஆட்டோவில் சென்றுள்ளனர்.
அப்போது மாங்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நந்தகுமார், அர்ச்சனா, குழந்தை ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.