திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜா கவுண்டர் வட்டம் பகுதியில் ஞானசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசின் என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு அஸ்வந்த்(3), ரிஷ்வந்த்(1 1/2) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். ஞானசேகர் தனது வீட்டிற்கு அருகிலேயே புதிதாக மற்றொரு வீடு கட்டி வந்தார். நேற்று காலை அசின் தனது மூத்த மகனை பள்ளிக்கு அழைத்து சென்றார். ஞானசேகர் புதிதாக கட்டப்படும் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

வீட்டில் தனியாக இருந்த ரிஷ்வந்த் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக ருஷ்வந்த் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தான். இதனை அடுத்து நீண்ட நேரமாக மகனை தேடிய பெற்றோர் குழந்தை இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.