சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் திருவேணி கார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மேலாளர் இளவரசன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் அளித்துள்ளார். அதில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் சங்ககிரி வி.என் பாளையத்தைச் சேர்ந்த நதியா என்ற பெண் கேஷராக வேலை பார்க்கிறார். அவர் தினமும் சங்ககிரி கிளை கார் நிறுவனத்திற்கு சர்வீஸ் வரும் வாகனங்களின் தகவல்களை தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

ஆனால் நதியா சர்வீஸ் உபகரணங்கள் வாங்குவதற்காக வந்த வாடிக்கையாளர்கள் பற்றி சரியான தகவலை கூறவில்லை. அவர் மீது ஏற்கனவே புகார்கள் வந்தது. இந்த நிலையில் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்த போது திவ்யா 12 லட்சத்து 59 ஆயிரத்து 82 ரூபாயை கையாடல் செய்தது. தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் நதியாவை பிடித்து விசாரணை நடத்தினார். அவர் பணத்தை கையாடல் செய்தது உறுதியானது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.