சீனாவின் சீலிங் மாகாணத்தில் ஒரு வாலிபர் வசித்து வருகிறார். இவர் தான் பணக்காரன் என கூறி ஐந்து பெண்களை ஏமாற்றியுள்ளார். இவரது தந்தை கட்டுமானத்துறையில் வேலை பார்க்கிறார். தாய் உதவியாளராக இருக்கிறார். அந்த நபர் தன்னை பணக்காரனாக காட்டிக் கொண்டு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். பிறகு அந்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அந்த பெண்ணுக்கு உண்மை தெரியவந்தது. இதனால் அந்த பெண் அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார். அதன் பிறகு அவர் மீண்டும் ஒரு பெண்ணுடன் பழகி அவரிடம் இருந்து 16.50 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் தனது முதல் கர்ப்பிணி மனைவி தங்கி இருக்கும் அதே குடியிருப்பில் தான் பழகிய பெண்ணையும் தங்க வைத்தார். இப்படி தொடர்ந்து பெண்களுடன் பழகி பல லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளார். முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர் தான் பழகிய பெண்களை ஒரே குடியிருப்பில் தங்க வைத்துள்ளார். இது மற்ற பெண்களுக்கு தெரியாது. 4 ஆண்டுகள் இப்படியே சென்றது. இது மற்ற பெண்களுக்கு தெரியாது. கடைசியாக ஒரு பெண் அவரைப்பற்றி உண்மை அறிந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 9.5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 14 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.