மனிதனின் பலவீனம் எங்கு தொடங்குகிறதோ, அங்குதான் போலிச் சாதுக்களின் வியாபாரம் சிம்மாசனம் போட்டு அமர்கிறது. கவலைகளும் துயரங்களும் நம்மைச் சூழ்ந்து, மூச்சு முட்ட வைக்கும்போது, யாராவது நமக்கு வழி காட்ட மாட்டார்களா என்று ஏங்கும் அந்த நொடியைத் தான் இந்த உலகம் மிகக் கொடூரமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
அதற்குப் பலியான எத்தனையோ அப்பாவிகளின் வரிசையில், இப்போது நாசிக்கைச் சேர்ந்த பெண்களின் கண்ணீர் கதையும், ஒட்டுமொத்த மகாராஷ்டிராவையே உலுக்கிக் கொண்டிருக்கும் போலி ஜோதிடர் அசோக் கராத்தின் அக்கிரமங்களும் நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நாசிக்கைச் சேர்ந்த தன்னைத்தானே ஜோதிடர் என்று மார்தட்டிக்கொண்ட போண்டு பாபா அசோக் கராத், கவலையோடு தன் வாசலைத் தேடி வந்த பெண்களை மிரட்டி, பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றத்திற்காக இப்போது கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டுள்ளார்.
வெறும் பாலியல் சீண்டல்கள் மட்டுமல்ல, தன்னை நம்பி வந்தவர்களிடம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்த புகாரில், தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அமலாக்கத்துறையின் இரும்புப் பிடிக்குள் சிக்கியுள்ளார். அவர் கைது செய்யப்பட்டபோது, பாதிக்கப்பட்ட பெண்கள் கதறி அழுததும், அவர் மீது அடுத்தடுத்து பாய்ந்த எஃப்ஐஆர் நகல்களும் அவர் எப்படிப்பட்ட ஒரு நரகத்தை அங்கே நடத்தி வந்தார் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.
ஆனால், இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் சோஷியல் மீடியாவில் பரவி வரும் ஒரு ‘முத்த வீடியோ’ ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் கொதித்தெழச் செய்துள்ளது. “முத்தம் கொடுத்தால் உன்னுடைய அத்தனை கஷ்டங்களும் தீர்ந்துவிடும்” என்று கூறி, அந்தப் போலி பாபா ஒரு பெண்ணை முத்தமிடும் அந்த வீடியோ, பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைப்பதோடு, நம் சமூகத்தின் அறியாமையை நினைத்து நெஞ்சை பதற வைக்கிறது.
அந்தப் பெண்ணோ, தன் கவலைகள் தீர்ந்துவிடும் என்ற குருட்டு நம்பிக்கையில், தன்னை அந்தப் பாவி தொடுவதைக் கூட தடுக்க முடியாமல், ஒருவித நிர்பந்தத்தோடு அழுதுகொண்டே நிற்பது பார்ப்பவர்களின் உலுக்கும் விதமாக உள்ளது. இந்த வீடியோ வட இந்தியாவில் எடுக்கப்பட்டது என்று சோஷியல் மீடியாவில் ஒரு சாரார் கூறினாலும், இதன் உண்மைத்தன்மை மற்றும் சரியான இடம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
View this post on Instagram
“>
இருந்தாலும், அற்புதங்கள் என்ற பெயரிலும், மூடநம்பிக்கை என்ற பெயரிலும் இன்றும் நமது நாட்டில் பெண்கள் மிக எளிதாக வேட்டையாடப்படுகிறார்கள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு ஆகச்சிறந்த சாட்சியாக மாறியுள்ளது.”எந்தவொரு நோய்க்கோ அல்லது தனிப்பட்ட பிரச்சனைக்கோ இது போன்ற போலி ஆசாமிகளை நம்பி உங்கள் வாழ்க்கையைத் தொலைக்காதீர்கள்.
