தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக என்எல்சி விவகாரம் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
விவசாயிகளின் ஒப்புதல் இன்றி ஒரு அங்குலம் நிலத்தை கூட கையகப்படுத்தக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது என்எல்சி நிறுவனத்திற்கும் அங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் இடையே பிரச்சனை நிலவுகிறது. அதாவது என்எல்சியில் ஊழியர்கள் பணி நிரந்தர உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் 6 மாதத்திற்குள் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தான் நடிகர் விஜய்யும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.