தென்னிந்திய சினிமா அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் பிரியாமணி. இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் பிரியாமணி தனக்கு ஷாருக்கான் மீது க்ரஷ் இருப்பதாக கூறியுள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் உங்களுக்கு பாலிவுட் நடிகர்களை பிடிக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரியாமணி, எனக்கு நிறைய பாலிவுட் நடிகர்களை பிடிக்கும். ஆனால் ஷாருக்கான் மீது கிரஷ் உள்ளது. எனக்கு அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.