தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படம் ஜன.11-ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் ஜன.11-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே தற்போதிருந்தே கடும் மோதல் நிலவுகிறது. இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடிகர் அஜித் ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அந்த போஸ்டரில் எந்த ஆட்ட நாயகனாலும் எங்க கிட்ட ஆட்ட (ம்) முடியாது என்ற வாசகம் இருக்கிறது. மேலும் இந்த போஸ்டர் மறைமுகமாக நடிகர் விஜயை சீண்டுவதாக இருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.