எந்திரன் பட கதை விவகாரத்தில் இயக்குனர் சங்கருக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை ஐகோர்ட்.

எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என ஆரூர் தமிழ்நாடன் என்பவர் அளித்த புகாரில் காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆனதால் வழக்கை ரத்து செய்ய கோரி இயக்குனர் சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். 4 வாரங்களில் ஆரூர் தமிழ்நாடன் பதிலளிக்க உத்தரவிட்டு சங்கருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.