அதிமுக தலைமையில் தமிழகத்தில் ஒரு கூட்டணி அமையும் என சொல்கிறார்கள். அதனால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா ? என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எதுவுமே பின்னடைவு இல்லை. 2024 பாப்பீங்க. எதுவுமே பின்னடைவு கிடையாது. அரசியலைப் பொறுத்தவரை சில விஷயங்கள் வரப் பிரசாதமாக அமையும். அது நமக்கு தெரியாது. சரித்திரம் என்ன சொல்லுதுன்னா…

ஒரு விஷயம் நடக்கும் போது நமக்கு உண்மை தன்மையை தெரியாது. நடந்து முடிந்த பிறகு திரும்பி பார்த்தோம் என்றால் ? சில இடத்தில் அது சரித்திரமாக தோன்றும்.  சிங்கப்பூர் –  மலேசியா பாருங்க. சிங்கப்பூர் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்காமல் மலேசியா கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட்டாங்க. சிங்கப்பூர் எங்களுக்கு வேண்டாம் என்று மலேசியாவால் துரத்தப்பட்ட ஒரு நாடு சிங்கப்பூர்.  இன்னைக்கு சிங்கப்பூரின் ஜிடிபி என்ன ? மலேசியாவை விட எத்தனை மடங்கு இருக்கு ? சரித்திரத்தில் எப்போதுமே அதை வைத்து பார்க்க முடியாது.

ஒரு காலகட்டத்திற்கு பிறகு திரும்பி பார்க்கும் போது தான்,  சில விஷயம் தெரியும். அதனால தான் நான் ஏற்கனவே சொன்னேன். எனக்கு கிரவுண்ட் லெவல் பல்ஸ் தெரியுது. நான் கிரவுண்ட்ல இருக்கிற ஆளு. நான் எங்கேயுமே உட்காரதில்ல..  கம்ப்ளிட்டா கிரவுண்ட்ல ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம்… 10 மணி நேரம் அழுகுல… வியர்வையில் இருக்கின்றேன்.  என் கையெல்லாம் பாருங்க… இதெல்லாம் பாருங்க காயங்கள்.. மக்களோடு மக்களாக கிரவுண்ட்ல இருக்கிற ஆளு. எனக்கு பல்ஸ் தெரியும். நான் உறுதியாக இருக்கின்றேன். 2024க்கு மிக உறுதியா இருக்கேன் என தெரிவித்தார்.