உத்தரப்பிரதேசம் குஷினகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஒரு மாணவி கோரக்புரில் உள்ள ஒரு விடுதியில் தங்கிப் போட்டித் தேர்வுக்குப் படித்து வந்துள்ளார். 2022 ஆம் ஆண்டு அவரது உறவினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், BRD மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை எடுக்க உதவியுள்ளார் அந்த பெண். அப்பொழுது அங்கு சந்தித்த சஞ்சீவ் துபே என்ற இளைஞனுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அவர்களது மொபைல் நம்பரை பகிர்ந்துள்ளார்.

சஞ்சீவ் கட்டுமானப் பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது செல் போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர், இந்நிலையில் மாணவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியுள்ளான். இதனால் 2 முறை கர்ப்பமான மாணவிக்கு, சஞ்சீவின் மாமா உதவியுடன் கருக்கலைப்பு செய்துள்ளனர்.

பின்னர் திருமணம் செய்துகொள்ள மறுத்த சஞ்சீவ், மாணவியைத் தாக்கியுள்ளார். இது குறித்து உள்ளூர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், எஸ்.எஸ்.பி.யிடம் புகார் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கோபால்‌கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சீவ் துபே மற்றும் அவரது மாமா வினய் துபே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.