எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அவரின் தந்தை கலைஞர் கருணாநிதி பெயரை மட்டும் தான் வைப்பதாகவும், கருணாநிதி பெயரில் திட்டங்களை செயல்படுத்துவதில் மட்டுமே முதல்வர் நோக்கம் கொண்டுள்ளதாகவும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு சரிவர நிதி ஒதுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். அதோடு கலைஞர் கருணாநிதி பெயரின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் உங்களுடைய அறக்கட்டளை சார்பில் அந்த பணிகளை செய்யுங்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்த நிலையில் தற்போது அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து விருதுநகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தமிழினத்திற்காக 80 வருடங்களாக உழைத்த கலைஞர் கருணாநிதியின் பெயரை மக்கள் நலத்திட்டங்களுக்கு வைக்காமல் பதவி சுகத்திற்காக கரப்பான் பூச்சியை போன்று ஊர்ந்து சென்ற உங்கள் பெயரை வைக்க முடியும். அவர் வாய் துடுக்காகவும் ஆணவமாகவும் பேசி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி ஆணவத்தோடு பேசுவதால் தான் தமிழ்நாட்டில் அவர் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறார். தொடர்ந்து இப்படியே ஆணவத்துடன் பேசினால் தமிழ்நாட்டு மக்கள் அடுத்தடுத்து உங்களுக்கு தோல்வியை மட்டும் தான் கொடுப்பார்கள் என்று கூறினார்.