தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சுகுமார் இயக்கத்தில் நடித்த புஷ்பா திரைப்படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல் செம ஹிட் அடித்தது. இந்த பாடலுக்கு நடிகை சமந்தா கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். இதன் காரணமாக புஷ்பா 2 படத்தில் கவர்ச்சி பாடலுக்கு சமந்தா நடனமாடுவாரா அல்லது வேறு யாராவது ஆடுவார்களா என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தில் சமந்தாவுக்கு பதில் இளம் கதாநாயகியான நடிகை ஸ்ரீலீலா நடனம் ஆடுவது உறுதியாகிவிட்டது. அதாவது அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து ஸ்ரீலீலா நடனமாடும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ரீலீலா நடனத்தில் கலக்கி வருகிறார். அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகிறது. மேலும் அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும் நிலையில் தற்போது நடிகை ஸ்ரீலீலா புஷ்பா 2 திரைப்படத்தில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது.