சென்னை அடையாரில் உள்ள முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடத்திற்கு அருகில் “திராவிடமே தமிழுக்கு அரண்” என்ற கருத்தரங்கில் நடிகர் சத்யராஜ் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, நான் 15 வயதாக இருக்கும்போது, பராசக்தி திரைப்படத்தைப் பற்றி கேட்டபோது, தமிழில் மீது ஆர்வம் கொண்டேன். ஈழ விடுதலைக்கு பெரிய உத்வேகம் கொடுத்தது திராவிடம் தான். ஆரியம் திராவிடத்தை எதிர்ப்பது சரி, தமிழ் தேசியம் என்ற பெயரில் எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது மிகவும் ஆபத்தானது.

தந்தை பெரியார் இதைப்பற்றி பேசியுள்ளார், அவரிடம் நான் பேசுவது எல்லாம் சரியா என்று கேட்டால், நீ பேசுவதை பார்த்து அவர்கள் கோபப்பட்டால், நீ பேசுவது சரி, இல்லை என்றால் நீ பேசுவது தவறு என்று கூறினார். டெக்னாலஜி வளர்ந்து வருகிறது, நமக்கு இரு மொழி கொள்கைதான் முக்கியம். முன்மொழி எதற்கு. மாணவனுக்கு நேரம் என்பது மிகவும் முக்கியம். அவன் பள்ளிக்குப் போய்விட்டு திரும்பி வரவேண்டும், அதன் பிறகு விளையாட்டு, கொஞ்ச நேரம் டிவி, அப்படித்தானே வாழ்க்கை போகும்.

என்னை மாதிரி சரியாக படிக்காதவர்களுக்கு, ஆங்கிலம், கணக்கு படிப்பதே பெரிய தலைவலியாக இருக்கிறது. இதில் இந்தியும் படிக்க வேண்டும் என்று சொன்னால் கோபம் வரும். தம்பி அஜித் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், அவர் பைக்கில் டூர் போவதை பற்றி கூறியிருந்தார். சம்பந்தமே இல்லாத ஒருவர் மீது கோபம் வருகிறது என்றால் அது மதம் தானே. ஏதோ ஒரு நாட்டுக்கு போகும் போது ஒருவரை பார்க்கிறோம். எந்த சண்டையும் இல்லை அவரிடம். ஆனால் அவரிடம் வெறுப்பை உருவாக்குவதற்கு காரணம் மதம் தான் என்று அழகாக கூறியிருந்தார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள் என்று நடிகர் சத்யராஜ் கூறினார்.