சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை போனஸ் தருவதாக அறிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவன ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டும் ஆறு மாத சம்பளத்தை போனசாக அந்நிறுவனம் வழங்கி இருந்தது.

முன்னதாக துபாயின் எமிரேட்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 20 வார சம்பளத்தை போனஸ் தொகையாக வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்த நிறுவனங்களின் லாபம் கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது